Published : 02 Dec 2019 02:44 PM
Last Updated : 02 Dec 2019 02:44 PM
ரூ.100 லஞ்சம் கேட்டதாக அஞ்சல் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்துள்ளது.
மிகப்பெரிய லஞ்ச லாவண்யங்கள், சட்டத்தை மீறி நடத்தும் மெகா மோசடிகளை வெளிக்கொணர மத்திய அரசின் கீழ் சிபிஐ இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று ரூ.100 லஞ்சம் கேட்ட அஞ்சல் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
அஞ்சல்துறையின் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சரோஜ் மற்றும் அஞ்சல் உதவியாளர் சூரஜ் மிஸ்ரா ஆகியோர் ஒவ்வொரு ரூ.20,000 டெபாசிட்டிலும் ரூ.100 லஞ்சம் கோரியதாக கமிஷன் முகவர் குற்றம் சாட்டினார். முகவரின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒரு சிபிஐ அதிகாரி கூறுகையில், "ரூ.100 லஞ்சம் கேட்டதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் கவலையில்லை, அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. எந்தவொரு வழக்கும் எங்களுக்குப் பெரியது அல்லது சிறியது இல்லை. நாங்கள் எல்லா வழக்குகளையும் சமமாக நடத்துகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT