Published : 28 Nov 2019 05:17 AM
Last Updated : 28 Nov 2019 05:17 AM

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி: முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்பு

மும்பை

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கூட்டணி ஆட்சி இன்று பொறுப்பேற்கவுள்ளது. மும்பை தாதரிலுள்ள சிவாஜி பூங்கா மைதா னத்தில் இன்று மாலை நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர் தலில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை இல்லை. கூட்டணி அமைத் துப் போட்டியிட்ட சிவசேனா, பாஜக இடையே சுழற்சி முறையில் முதல் வர் பதவி என்ற பிரச்சினையால் கூட்டணி உடைந்தது. இதை யடுத்து காங்கிரஸ், என்சிபி கட்சி களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்து பேசி வந்தது. ஆனால் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப் பட்டது.

இதனிடையே அங்கு திடீர் திருப்பமாக என்சிபி தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக தேவேந் திர பட்னாவிஸும் துணை முதல் வராக அஜித்பவாரும், பதவியேற் றுக் கொண்டனர். இதை எதிர்த்து சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக தலைமையிலான அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் நேற்று முன்தினம் அஜித் பவார், பட்னாவிஸ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதன் மூலம் நம்பிக்கை வாக் கெடுப்பை சந்திக்காமலேயே பாஜக தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

பாஜக ஆட்சி முடிவுக்கு வந் ததை அடுத்து, சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட் டணி கட்சிகள் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டின. நேற்றுமுன்தினம் மாலை 3 கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் பதவிக்கு சிவசேனா தலை வர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப் பட்டார். உடனடியாக 3 கட்சிகளின் தலைவர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

இதைத் தொடர்ந்து நேற்று ஆளு நர் பகத் சிங் கோஷ்யாரியை, உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.

இதுகுறித்து தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத்பவார், ‘‘மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் நாளை (இன்று) மாலை 6.40 மணிக்கு புதிய அரசு பதவி ஏற்பு விழா நடக்கிறது. அப்போது மகாராஷ்டிராவின் அடுத்த முதல் வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார்” என்றார்.

துணை முதல்வர் பதவி

கூட்டணி அரசில் முதல்வர், 15 அமைச்சர்கள் பதவி சிவசேனா கட்சிக்கு அளிக்கப்படுகிறது.

ஒரு துணை முதல்வர், 13 அமைச்சர்கள் பதவி என்சிபி கட்சிக்கும், பேரவைத் தலைவர், 13 அமைச்சர்கள் பதவி காங் கிரஸுக்கும் வழங்கப்படவுள்ளது என கூட்டணி வட்டாரங்கள் தெரி வித்தன.

ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிலையில் சிவாஜி பார்க் மைதானத்தில் பதவியேற்பு விழா வுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்ட மாக நடைபெற்று வருகின்றன.

விழாவுக்கு ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் வருவார்கள் என்பதால் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா நடைபெறும் சிவாஜி பார்க் மைதானத்தில்தான் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் சமாதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x