Published : 26 Nov 2019 08:17 AM
Last Updated : 26 Nov 2019 08:17 AM
மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் மீதான ரூ.70 ஆயிரம் கோடி முறைகேடு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக அந்த மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் அஜித் பவார். இவர் அமைச்சராக இருந்தபோது, 1999 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்த, மாநிலம் முழுவதும் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சிறப்பு நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இத்திட்டங்களை அமல் படுத்தியதில் ரூ.35 ஆயிரம் கோடி வரையில் முறைகேடு நடை பெற்றதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனடிப்படையில், மகாராஷ் டிராவில் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும், நீர்ப்பாசன திட்டங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர் பாக, அஜித் பவார் மீது மாநில லஞ்ச ஒழிப்புத் துறையும், அமலாக் கத் துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தன. மொத்தம் 20 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், அவர் மீதான முறைகேடு வழக்குகளில், 9 வழக்கு கள் முடித்து வைக்கப்படுவதாக, மகாராஷ்டிரா மாநில லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அறிவித் துள்ளது.
இந்த முறைகேடுகளில் அஜித் பவாருக்கு தொடர்பில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ள தாகவும், எனவே அவர் மீதான 9 வழக்குகள் முடித்து வைக்கப் படுகின்றன எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
அவர் மீது பதிவு செய்யப் பட்டுள்ள 20 முதல் தகவல் அறிக்கைகளில் (எப்ஐஆர்) 9 வழக்குகள் முடித்து வைக்கப் படுவதாக அவர்கள் தெரிவித்துள்ள னர். இந்த 9 வழக்குகளும் நீர்ப் பாசனத் திட்ட முறைகேடுகள் தொடர்பானவை என்று தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி யமைக்க அஜித் பவார் ஆதர வளித்ததுடன், மாநிலத்தி்ன் துணை முதல்வராக அவர் பொறுப்பேற்ற 2 நாட்களிலேயே அவர் மீதான முறைகேடு வழக்கு முடித்து வைக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT