Published : 24 Nov 2019 01:17 PM
Last Updated : 24 Nov 2019 01:17 PM
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மபுத்திரா புஷ்கர திருவிழா பற்றி நாட்டில் அதிகம் பேர் அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' மாதாந்திர வானொலி நிகழ்ச்சிமூலம் இன்று தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழையும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவரது கடந்த ஆட்சியைப் போல இந்த ஆட்சியிலும் மன் கி பாத் உரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.
இன்று தனது மாதாந்திர ஒலிபரப்பில் நாட்டு மக்களை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புஷ்கரம், புஷ்கராலு மற்றும் புஷ்கராஹா என்றும் அழைக்கப்படும் பிரம்மபுத்திரா புஷ்கர திருவிழா பற்றி நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேள்வி எழுப்பினார்.
'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கூறியதாவது:
பிரம்மபுத்திரா புஷ்கர திருவிழா நவம்பர் 4 முதல் 16 வரை நடைபெற்றதாகவும் இத் திருவிழாவில் பங்கேற்க நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் வந்திருந்ததாகவும் அசாமில் நாகானைச் சேர்ந்த திரு.ரமேஷ் சர்மா எழுதுகிறார், இதைப்பற்றி கேள்விப்பட்டு நீங்கள் ஆச்சரியப்பட்டதில்லையா? தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் இத் திருவிழா பற்றி நாட்டில் பலருக்கு ஏனோ தெரியவில்லை.
இத் திருவிழாவுக்கு யாராவது சர்வதேச நிதி வழங்கியிருந்தால், அல்லது அதைப்பற்றி குறிப்பிட வேறு ஏதேனும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால், அது நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறி ஒரு விவாதத்திற்கு வழிவகுத்திருக்கலாம்.
என் அன்பான நாட்டு மக்களே, புஷ்கரம், புஷ்கராலு, புஷ்கரஹா. - இந்த சொற்றொடர்களை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவை என்ன தெரியுமா? நான் உங்களுக்குச் சொல்கிறேன், நாடு முழுவதும் உள்ள 12 வெவ்வேறு நதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இப் புனிதத் திருவிழாக்கள் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
கும்பமேளா திருவிழாவைப் போலவே புஷ்கரத் திருவிழாவும் 'தேசிய ஒற்றுமை' என்ற கருத்தை ஊக்குவிக்கிறது. அது மட்டுமின்றி இத் திருவிழா 'ஏக் பாரத் சேஷ்த்திர பாரத்' என்ற தத்துவத்தையும் எதிரொலிக்கிறது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் தமிராபரணி ஆற்றில் புஷ்கரத் திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு அது பிரம்மபுத்ரா நதியில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு இது தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மாநிலங்களில் பாயும் துங்கபத்ரா நதியில் நடைபெறும். ''
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி, 'மன் கி பாத்' மாதாந்திர வானொலி உரையில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT