Published : 21 Nov 2019 10:02 AM
Last Updated : 21 Nov 2019 10:02 AM

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக பிரதமருடன் ஆலோசனை நடத்தவில்லை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக பிரதமரிடம் விவாதிக்கவில்லை என்று சரத் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அளவுக்கதிகமாக பெய்த மழை யினால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி முற்றிலுமாக நாசமடைந்தன. குறிப்பாக, வெங்காயம் விளைச் சலுக்கு பிரசித்திபெற்ற நாசிக் மாவட்ட விவசாயிகள் பெரும் இழப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சரத்பவார் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 3 பக்கங்களை கொண்ட மனுவினை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைவிடாது பெய்த கனமழையின் விளைவாக 325 தாலுகாக்களில் 54.22 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. இதனால் விவசாயிகள் விவரிக்க முடியாத துயரத்தில் சிக்கியுள்ள இவ்வேளையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளதால் விவசாயிகளின் துயர் துடைப்பு மற்றும் நிவாரணம் தொடர்பான தங்களின் உடனடித் தலையீடு மிகவும் அவசியமாக உள்ளது.

அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிக்காக உங்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப் பேன். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சரத் பவார் கூறும்போது, “மகாராஷ் டிர விவசாயிகள் கடும் துன்பத்தில் உள்ளனர். அவர்களின் துயர் துடைக்க உதவவேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டேன்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப் பது தொடர்பாக பிரதமருடன் நான் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்றார்.

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி குறித்து நிருபர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க சரத் பவார் மறுத்து விட்டார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x