Published : 20 Nov 2019 03:19 PM
Last Updated : 20 Nov 2019 03:19 PM

சபரிமலை கோயில் நிர்வாகத்திற்கு தனிச்சட்டம்: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

சபரிமலை கோயில் நிர்வாகம் தொடர்பாக தனிப்பட்ட சட்டம் ஒன்றை கேரள அரசு இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 63 சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் நீதிபதிகள்பரிந்துரைத்தனர். அதேசமயம் பெண்கள் செல்லலாம் என்ற முந்தைய உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சபரிமலை கோயில் நிர்வாகம் தொடர்பாக 2011-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கோயில் நிர்வாகத்தில் பெண்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சபரிமலை கோயில் நிர்வாகம் தொடர்பாக தனிப்பட்ட சட்டம் ஒன்றை கேரள அரசு இயற்ற வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இதுதொடர்பான சட்ட வரைவு ஒன்றை உருவாக்கி விவரங்களை ஜனவரி மாதம் 3-ம் வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

முன்னதாக இந்த வழக்கில் கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் உள்ள கோயில்கள் நிர்வாகம் தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாகவும், நிர்வாகத்தில் பெண்களும் இடம் பெறும் வகையில் மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x