Published : 18 Nov 2019 01:32 PM
Last Updated : 18 Nov 2019 01:32 PM
கசப்புகளை இனிப்பாக மாற்றியவர் ஜேட்லி என்று மாநிலங்களவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று தெரிவித்தார்.
மாநிலங்களவையில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ராம் ஜெத்மலானி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
2014-ம் ஆண்டில் மோடியின் முதல்முறையான ஆட்சியின்போது நிதி அமைச்சராக பணியாற்றிய அருண்ஜேட்லி, அவர் உடல்நிலை பிரச்சினை காரணமாக 2019 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. கடந்த ஆகஸ்ட் 24 அன்று அவர் மறைந்தார்.
இன்று தொடங்கிய குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று மாநிலங்களவையில் கூறியதாவது:
''பாஜகவுக்கு மட்டுமல்ல மொத்த நாட்டிற்கு அருண்ஜேட்லியின் மறைவு ஒரு பேரிழப்பு ஆகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
அருண் ஜேட்லியை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். இனிமையாகப் பழகக் கூடியவர். அரிய அரசியல் கசப்பு எங்களின் தனிப்பட்ட நல்ல உறவுகளின் காரணமாக இனிமையாக மாறியது.
அவரது கல்லூரி வாழ்க்கையிலிருந்தே அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். அவர் ஒரு நல்ல மாணவர், நல்ல பேச்சாளர், நல்ல தலைவர்.''
இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT