Published : 16 Nov 2019 10:08 AM
Last Updated : 16 Nov 2019 10:08 AM
பஞ்சாப், ஹரியாணா நிலத்தடி நீர் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க வில்லை என்று ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் வைக்கோலை எரிப்பதால், ஏற்படும் கடுமையான புகைமூட்டம் டெல்லியைச் சூழ்ந்து காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பஞ்சாப், ஹரியாணா நிலத்தடி நீர் சட்டம் அமல்படுத்தப்பட்டதால்தான் டெல்லியில் காற்று மாசு அதிகரித் துள்ளது என்று சில பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இந்தச் சட்டம் 2009 முதல் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங் களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் மழைக்காலம் தொடங்கிய பிறகு அதாவது ஜூன் மாத மத்தியில்தான் விதைக்கும் பணிகளை தொடங்கவேண்டும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
விதைக்கும் பணிகள் ஜூன் மாத மத்தியில் தொடங்கப்பட்டதால் அறுவடை பணிகள் அக்டோபர் இறுதியில் நடைபெறுகின்றன. அறுவடைக்குப் பின்னர் வைக் கோலை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், அப்போது காற்றின் திசை மாறுவதாலும் அதற்கு இந்த நிலத்தடி நீர் சட்டம் தான் காரணம் என்றும் பத்திரிகை களில் செய்திகள் வந்தன.
ஆனால் இவ்வாறு கூறப்படு வதில் எந்த உண்மையும் இல்லை என பிசினஸ்லைன் நடத்திய ஆரம்பக்கட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அறுவடை தாமதமாவதற்கு நிலத்தடி நீர் சட்டம் காரணமில்லை என்று பஞ்சாப் மாநில விவசாயிகள் ஆணையத் தின் உறுப்பினர் செயலரும், வேளாண் துறை ஆணையருமான பல்விந்தர் சிங் சாந்து தெரிவித் துள்ளார்.
கம்பீர் பங்கேற்கவில்லை
இதனிடையே டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க நேற்று நகர்ப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
கிழக்கு டெல்லி மக்களவை தொகுதி எம்.பி. கவுதம் கம்பீர், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் காற்றுமாசு நேற்று மிக மோசமான நிலையை தொட்டது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறிய தாவது: டெல்லியில் ஒற்றை, இரட்டை இலக்க எண் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் இரண்டு மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளித்தது ஏன்? வாகனக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே பிரச் சினைக்கு தீர்வு கிடைத்து விடாது. டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உ.பி. ஆகிய 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT