Last Updated : 29 May, 2014 09:59 AM

 

Published : 29 May 2014 09:59 AM
Last Updated : 29 May 2014 09:59 AM

3 கர்நாடக மத்திய அமைச்சர்களும் எடியூரப்பாவுக்கு எதிரானவர்கள்: பாஜகவின் புதிய வியூகம்

கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, பாஜக பொதுச் செயலாளர் அனந்தகுமார், ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகிய மூவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது எடியூ ரப்பா ஆதரவாளர்களை அலற வைத்துள்ளது.

எடியூரப்பாவை வீழ்த்துவதற் கான வியூகத்தை கட்சி தொடங் கியுள்ளதோ என அவர்கள் சந்தேகிக்கின்றனர். எடியூரப்பா முன்மொழிந்த அவரது ஆதரவா ளர் ஷோபா கரந்தல ஒஜேவை பாஜக நிராகரித்து விட்டதால், கர்நாடகத்தில் இருந்து மாநிலங் களவைக்கு தேர் ந்தெடுக்கப்பட்ட வெங்கய்ய நாயுடுவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என எடியூரப்பா எடுத்துரைத்த போதும் பாஜக அவரின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை.

இதனால் செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, கட்சித் தொண்டர்களையும் செய்தி யாளர்களையும் சந்திப்பதை தவிர்த்தார். மேலும் கட்சி அலுவலகத்துக் கும் செல்லாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சதானந்த கவுடா

மத்திய ரயில்வே அமைச்சராக பதவியேற்றிருக்கும் டி.வி.சதானந்த கவுடா (62), கர்நாடக அரசியலில் எவ்வித பின்புலமும் இல்லாமல் போராடி உச்சத்தை தொட்டவர். கர்நாடக‌ மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் சுள்ளியாவை சேர்ந்தவர். இளங்கலை அறிவியலும், சட்டமும் பயின்றவர். கர்நாடகத்தில் கணிசமாக வாழும் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்.

1983-ல் ஆர்.எஸ்.எஸ். அமைப் பில் சேர்ந்த இவர், படிப்படி யாக வளர்ந்து, ஜனசங்கத்தில் சங்க மித்து பிறகு பாஜகவில் இணைந்தார். அக்கட்சியில் வட்டச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சதானந்த கவுடா மெல்ல மெல்ல கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை அடைந்தார். இவர் மாநில பாஜக தலைவராக இருந்தபோது தான் தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் பாஜக அரியணை ஏறியது.

இவர் எம்.பி.யாக இருக்கும் போது, ஊழல் வழக்கு காரணமாக எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகியபோது, அந்தப் பதவி இவருக்கு கிடைத்தது. பின்னர் எடியூரப்பாவுக்கு எதிராகவே காய் நகர்த்தினார். இதனாலேயே இவர் முதல்வர் பதவியை இழக்கவும் நேரிட்டது.

அனந்தகுமார்

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக பொறுப் பேற்றிருக்கும் அனந்த குமார், எடியூரப்பாவுக்கு இன்னொரு தலைவலி. ஏனென்றால் கர்நாடகத் தில் 2008-ல் பாஜக பெரும்பான்மை யோடு ஆட்சி அமைக்க வந்தபோது, எடியூரப்பா முதல்வர் ஆவதை கடுமையாக எதிர்த்தார். இதனால் இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.

1996 மக்களவைத் தேர்தலில் இருந்து 2014 வரை பெங்களூர் தெற்கு தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்றுள்ள அனந்தகுமார் (55) பிராமணர் வகுப்பைச் சேர்ந்த வர். 1985-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். மூலம் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த அனந்த்குமாருக்கு கர்நாடக பாஜகவில் செல்வாக்கு இல்லை. ஆனால் மத்தியில் இருந்த செல்வாக்கினால் வாஜ்பாய் அமைச்சரவையில் பல துறைகளைப் பெற்று கேபினட் அமைச்சராக வலம் வந்தார்.

மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் அனந்தகுமார், தனது முழு செல்வாக்கையும் யாருக்கும் தெரியாத வகையில் ஆட்சியில் செலுத்துவார்.

ஜி.எம்.சித்தேஸ்வரா

மத்திய விமானத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் கவுடர் மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வரா தான் பாஜக கண்டெடுத்த எடியூரப்பாவுக்கான மாற்று. 62 வயதான சித்தேஸ்வரா கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர். இவரது தந்தை மல்லிகார்ஜூனப்பா இருமுறை வென்ற தாவணகெரே மக்களவைத் தொகுதியில் இவரும் பாஜக சார்பில் கடந்த 2004-ல் களமிறங்கினார்.

தாவணகெரே தொகுதியில் தொடர்ந்து 3 முறை வாகை சூடியதால் மத்திய அமைச்சர் பதவி இவரைத் தேடி வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x