Published : 24 May 2014 10:00 AM
Last Updated : 24 May 2014 10:00 AM

ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க ராஜபக்சேவிடம் மோடி வற்புறுத்த வேண்டும்- சர்வதேச பொதுமன்னிப்பு சபை கோரிக்கை

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. சபை விசாரணைக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஒத்துழைப்பு அளிக்க நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் இந்திய திட்ட இயக்குநர் சசிகுமார் வெலாத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் இப்படிப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பான வர்களை நீதியின் முன் நிறுத்த இலங்கை அரசு தவறிவிட்டது. போரின்போது அனைத்துத் தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் குறித்து சர்வதேச சட்டத்தின் கீழ் ஐ.நா. மனித உரிமை கள் ஆணையர் விசாரணை நடத்த 2014 மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானித்தது.

இந்த விசாரணையுடன் ஒத்து ழைக்க முடியாது என்று இலங்கை அரசு மே மாதம் அறிவித்தது. ஐ.நா. தலைமையிலான இந்த விசாரணை புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஆனால் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுப்பது தொடர்ந்து அங்கு நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களுக்கு ஊக்கமளிக்கிறது. அத்துடன், போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதும் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஐ.நா. தீர்மானத் தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா தனது மனித உரிமைகள் பொறுப்புகளைக் கைவிட்டது. அதை இப்போது சரிசெய்வதுபோல சர்வதேச விசார ணைக்கு ஆதரவு நல்கி இலங்கையை ஒத்துழைக்கும் படி வலியுறுத்த வேண்டும். இலங்கையில் நீதியும் சமரசமும் நிலைநாட்டப்பட இந்திய அரசு துணை நிற்கவேண்டும்.

இதற்கு முன்பு இரண்டு முறை 2012, 2013-ம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானங் கள் மீது இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததுடன் அங்கு மனித உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவம் வேண்டு மென்றே பொதுமக்கள் மீது குண்டுவீச்சு நடத்தியது, மக்களுக்கு உணவும், மருந்துகளும் சென்றடைவதைத் தடுத்தது என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இதற்கிடையில், விடுதலைப் புலிகள் குழந்தைகளை ராணுவத் தில் சேர்த்தனர் என்றும் போரில் பொதுமக்களை மனிதக் கேடயங் களாகப் பயன்படுத்தினர் என்றும் சாட்சிகள் கூறியுள்ளனர்.

போர் முடிவுற்றதிலிருந்து அரசை விமர்சிக்கும் மனித உரிமை பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் சிவில் சமுதாயத் தினர் ஆகியோர் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர், துன்புறுத் தப்படுகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x