Published : 29 May 2014 11:32 AM
Last Updated : 29 May 2014 11:32 AM
தெலங்கானாவின் 200 கிராமங்களை அவசரச்சட்டம் மூலம் சீமாந்திராவுடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் இன்று முழுஅடைப்பு போராடாம் நடந்து வருகிறது.
தெலங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் உள்ள 200 கிராமங்களை போலாவரம் நீர்பாசனத்திட்டத்திற்காக சீமாந்திராவுடன் இணைக்க மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் தெலங்கானாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமால் முடிவுகளை மேற்கொள்ளவே மத்திய அரசு அவசரசட்டத்தை இயிற்ற முயல்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
முழு அடைப்பினால் ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள கடைகள், உணவு விடுதிகள் மற்றும் தொழிற்கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்து போக்குவரத்து செயல்படுவதை தடுக்க டி.ஆ.ரெஸ் கட்சியினர் பேருந்து டிப்போக்களை முற்றுகையிட்டனர்.
இதனிடையே, வரும் ஜுன் 2 ஆம் தேதி, தெலங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்றுக்கொள்கிறார். தற்போது நடந்து வரும் குடியரசுத்தலைவர் ஆட்சி அன்று முதல் திரும்ப பெறப்படுகிறது.
தற்போது ஆந்திர மாநில ஆளுநராக இருக்கும் நரசிம்மன் தெலங்கானா மற்றும் சீமந்திரா மாநிலங்களுக்கு ஆளுநராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவும், போலாவரம் நீர்பாசனத்திட்டத்தை அரசியல் ஆதாயம் தேடும் அறிக்கைகளை கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT