Published : 10 May 2014 11:08 AM
Last Updated : 10 May 2014 11:08 AM
வாரணாசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது இறுதிக் கட்ட பிரச்சார பேரணியை மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நடசத்திர வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளதால், இந்த தொகுதிக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வாரணாசி தொகுதிக்கு வரும் 12–ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக சார்பில் அந்த கட்சியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாராணசி மக்களவைத் தொகுதியில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டுள்ளார். சுமார் 11 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பேரணி திட்டமிடப்பட்டு துவங்கியது. இஸ்லாமியர்கள் நிறைந்த கோல் கட்டா பகுதியில் ராகுல் காந்தி தனது பேரணியை தொடங்கினார். அவருடன் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக், குலாம் நபி ஆஸாத், சி.பி. ஜோஷி, மதுசுதன் மிஸ்திரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
"நாம் வெற்றியடை போராடுகிறோம். வெற்றி நம்முடையது தான் என்று நம்பிக்கையுடன் போராடுகிறோம்” என்று குலாம் நபி ஆசாத் பேசினார்.
முன்னதாக நேற்று வாரணாசியில் அரவிந்த் கேஜ்ரிவால் தனது கட்சி தொண்டர்களுடன் மாபெரும் பேராணியை மேற்கொண்டு, கங்கை அன்னைக்கு ஆரத்தி எடுத்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வாரணாசியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேரணியை நடத்தினார். இதில் ஆயிறக்கணக்கான மக்கள் கலந்து கொண்டாலும், வாரணாசியில் ராகுல் தனது பிரச்சாரத்தை மிகவும் தாமதமாக நடத்துவதாகவும், இதனை இறுதிக் கட்ட பிரச்சாரமாக மேற்கொண்டுள்ளார்.
புதன்கிழமை அன்று வாரணாசியில் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து வாரணாசி மற்றும் டெல்லியில் பாஜகவினர் வியாழக்கிழமை பெருந்திரளாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வாரணாசியில் மோடியின் பிரச்சாரமும், கங்கை வழிபாடிற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தேர்தல் ஆணையம் தனது நடுநிலைத் தன்மையை மறந்துவிட்டதாகவும், கடமையில் இருந்து தவறிவிட்டதாகவும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT