Published : 04 Jul 2017 10:07 AM
Last Updated : 04 Jul 2017 10:07 AM
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.189 கோடி மதிப்பிலான தங்கம் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக மிக பழமை வாய்ந்த வைரங்களும் திருடப் பட்டிருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளதாகவும், அங்குள்ள பொக்கிஷங்களை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் முறைகேடான முறையில் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத் திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 5 ரகசிய அறை களைத் திறந்து பொக்கிஷங்களை கணக்கிடும்படி உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அறைகள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டதில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள், தங்கக் கட்டிகள், அரியவகை நவரத்தினங்கள் உள்ளிட்ட புதையல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த புதையல்களை ஆய்வு செய்ய நீதிமன்றத்தின் ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட் டார். அவர் கோயில் நிர்வாகத் தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வும், முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் கோயில் சொத்துகளைத் தணிக்கை செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர் ஆய்வு மேற்கொண்டதில், ரூ.189 கோடி மதிப்புள்ள தங்கம் மாயமானது தெரியவந்தது. 10 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்போது ரூ.21 லட்சம் மதிப்புள்ள மிகப் பழமையான வைரங்கள் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பத்மநாபசுவாமியின் நாமத்தில் இடம்பெறும் இந்த வைரங்கள் மிகவும் பழமையானது என்பதால், அதன் மதிப்பு ரூ.21 லட்சத்தை விட அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் வைரங்கள் மாயமாகி இருப் பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கோயில் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT