Published : 13 Nov 2013 09:17 AM
Last Updated : 13 Nov 2013 09:17 AM
உச்ச நீதிமன்றத்தால் சட்டவிரோதக் குடியிருப்பு என அறிவிக்கப்பட்ட கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக , அக்குடியிருப்புக்குச் செல்லும் மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு இணைப்புகளை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டிக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
கேம்ப கோலா வளாகத்தில் 6 மாடிகளை மட்டுமே கட்டுவதற்கு அனுமதி பெற்று, 20 மற்றும் 17 மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி, இக்கட்டடத்தை இடிக்க மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
ஆனால், கட்டுமான நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட 102குடும்பத்தினரும் போராடி வருகின்றனர். இவ்வழக்கில், நவம்பர் 11 ஆம் தேதிக்குள் 102 வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றி அக்கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், சம்மந்தப்பட்ட குடியிருப்புவாசிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். ஆனால், குடியிருப்பு வளாகத்துக்குள் அதிகாரிகளை வரவிடாமல், பிரதான கதவுகளை மூடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் துண்டித்துள்ள மாநகராட்சி, போலீஸார் உதவியுடன் போராடுபவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
முதல்வர் பிருத்வி ராஜ் சவாண் இப்பிரச்னையில் தலையிடுவார் என அக்குடியிருப்புவாசிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் தொடர்புடைய விவகாரம் என்பதால் முதல்வர் தலையிட வில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT