Published : 03 Nov 2013 01:38 PM
Last Updated : 03 Nov 2013 01:38 PM

விஜயநகரம் விபத்து: பலியான 8 பேரின் அடையாளம் காணப்பட்டது

இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கபடும் என்று ரயில்வே போலீஸ் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவரின் உடல்நிலை இப்போது தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, விஜயநகரம் அருகே உள்ள கோட்லம் என்ற இடத்தில் நேற்று ஆலப்புழை - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் தீ பரவியதாக வந்ததி கூறப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

பின்னர், அந்த ரயில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் தண்டவாளத்தைத் தாண்டி ஓட முயன்றனர். அப்போது எதிரே வந்த ராயகாடா - விஜயவாடா பயணிகள் ரயில், தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டவர்கள் மீது மோதியது.

இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து அதிர்ச்சி வெளியிட்ட ஆந்திர முதல்வர் கிரண்குமார், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x