Published : 08 Oct 2013 12:19 PM
Last Updated : 08 Oct 2013 12:19 PM

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒப்புகை சீட்டு: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் வசதியை படிப்படியாக ஏற்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒப்புகை சீட்டு என்றால் என்ன?

அதாவது, தேர்தலில் வாக்கு அளிக்கும் வாக்காளர்களுக்கு, தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்காக வழங்கப்படும் சீட்டே ஒப்புகை சீட்டாகும்.

2014 பொது தேர்தலில் இதற்கான வசதியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நியாயமாகவும், சுதந்தரமாகவும் நடைபெற இந்த முறை உதவும் எனவும் நீதிபதிகள் பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய் அடங்கிய உச்ச நீதிமன்றம் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கு:

தேர்தலில் வாக்கு அளிக்கும் வாக்காளர்களுக்கு, ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்று கோரி பா.ஜ. தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல்கள், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாகலாந்து சட்டசபை தேர்தலில் 11 வாக்குச்சாவடிகளில்,வாக்குப்பதிவு இயந்திரத்தில் இந்த வசதி செய்யப்பட்டு இருந்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நிர்வாகம் மற்றும் நிதிப்பிரச்சினைகள் காரணமாக இந்த வசதி மற்ற தேர்தல்களிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறி இருந்தார்கள்.

பொதுத் தேர்தலுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் வசதி கொண்ட 13 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டும் என்றும். இதற்கு ரூ.1500 கோடி செலவாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x