Published : 19 Jun 2017 09:01 AM
Last Updated : 19 Jun 2017 09:01 AM
மேகாலயாவில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் சாலைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ரி-போய் மாவட்டம் உமியாம் தொழில்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 2 பெண்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.
இதேபோல் மவ்ஜ்ரோங்க் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி குழந்தை பலியானது. இதை யடுத்து, நிலச்சரிவால் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT