Published : 25 Nov 2013 12:33 PM
Last Updated : 25 Nov 2013 12:33 PM

ஆருஷி வழக்கில் இன்று தீர்ப்பு: நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

நொய்டாவைச் சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுமி ஆருஷி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. காஜியாபாத்தின் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 வருடம், 9 மாதங்கள் விசாரணைக்குப் பின் நீதிபதி எஸ்.லால் தீர்ப்பு கூற உள்ளார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகவிருக்கும் தீர்ப்பை ஒட்டி, காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 டி.எஸ்.பி.க்கள், 90 காவலர்கள் காசியாபாத் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக 11.30 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு பிற்பகல் 2 மணிக்கு வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள நொய்டாவின் மருத்துவத் தம்பதிகள் டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார். இவர்களது ஜல்வாயு விஹார் வீட்டில் 2008 மே 13-ல் இவர்களது ஒரே மகளான ஆருஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் ஜாமினில் வெளிவந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x