Published : 26 Oct 2013 03:08 PM
Last Updated : 26 Oct 2013 03:08 PM
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன்னை மாற்றிக் கொண்டால் அவரது கடந்த காலத்தை மறந்துவிடலாம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் மெளலானா கால்பே சாதிக் தெரிவித்தார்.
இதுதொடர்பாக லக்னெளவில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
குஜராத் மதத் கலவரத்தால் மோடி மீது மக்கள் இழந்துவிட்டார்கள். எனினும் அவர் தன்னை மாற்றிக் கொண்டால் அவரது கடந்த காலத்தை மறந்துவிடலாம்.
குஜராத் கலவரத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தன்னுடைய நடவடிக்கைகளின் மூலம் தான் மாறிவிட்டதை உணர்த்தினால் போதும்.
ஒட்டுமொத்த முஸ்லிம்களின் சார்பாக இந்த கருத்தை நான் கூறவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை முஸ்லிம் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் ஆதரிக்க முன்வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT