Published : 21 Dec 2013 12:00 AM
Last Updated : 21 Dec 2013 12:00 AM

தீண்டத்தகாத கட்சியாக மாறி வருகிறது காங்கிரஸ்: வெங்கய்ய நாயுடு

காங்கிரஸை விட்டு கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. தீண்டத்தகாத கட்சியாக காங்கிரஸ் மாறி வருகிறது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலக மான கமலாலயத்தில், நிருபர்களுக்கு அவர் வெள்ளிக் கிழமை அளித்த பேட்டி:

நான்கு மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. எமர்ஜென்சிக்கு பிறகு நடந்த தேர்தலில் அடைந்த தோல்வியைவிட, இந்த நான்கு மாநில தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு மிகப்பெரிய தோல்வியாகும். ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ், திமுக, டிஆர்எஸ், ஜேஎம்எம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறியுள்ளன. காங்கிரஸ், தீண்டத்தகாத கட்சி யாக மாறி வருகிறது. நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஏதாவது செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று முயற்சிக்கிறது. அதனால்தான் 3 ஆண்டுகளுக்குப் பிறகு லோக்பாலை நிறைவேற்றியுள்ளது.

தேசியக் குழுவில் முடிவு

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பா.ஜ.க. இன்னும் முடிவு செய்ய வில்லை. கூட்டணி பற்றி யாருடனும் எந்தக் கட்சியுடனும் பேசவில்லை. வரும் ஜனவரி 18, 19-ம் தேதிகளில் கட்சியின் தேசியக் குழு கூட்டம், டெல்லியில் நடக்க உள்ளது. கூட்டணி மற்றும் தேர்தல் பிரசாரம் பற்றி அதில் முடிவு செய்யப்படும். ஜனவரியில் இருந்து முதல் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பா.ஜ.க. மாநாடு நடத்தப்படும்.

இந்திய துணைத் தூதர் தேவயானி மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் எந்த நிபந்தனையும் இன்றி அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும்.

முதிர்ந்த அரசியல்வாதி

திமுக தலைவர் கருணாநிதி, முதிர்ந்த அரசியல்வாதி, சிறந்த அறிவாளி. மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர். அவர், மோடி சிறந்த நபர் என்றும் சிறந்த நிர்வாகி

என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை

உரிய நேரத்தில் தொடங்கும். அதிமுக உள்பட எல்லா கட்சி களுக்கும் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதற்கு உரிமை உள்ளது.

நாடாளுமன்றத் தேர் தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும் பான்மை கிடைக்கும். தனித் தெலங்கானாவை வரவேற்கிறோம். ஆனால், பிரச்சினை இல்லாமல் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 3 மாநிலங்களை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பிரித்திருக்கிறோம்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். பேட்டியின்போது, பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், மாநிலச் செயலா ளர்கள் வானதி சீனிவாசன், முருகானந்தம், துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x