Published : 26 Oct 2013 02:04 PM
Last Updated : 26 Oct 2013 02:04 PM
பிரதமர் மன்மோகன் சிங் செல்போன் உரையாடல்களை யாரும் ஒட்டுக் கேட்கவே முடியாது, அவரிடம் செல்போனே இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்பட உலகத் தலைவர்கள் 35 பேரின் செல்போன் உரையாடல்களை அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.எஸ்.ஏ.) ஒட்டுக் கேட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் மட்டும் இணையதளம் மூலம் 1350 கோடி தகவல்களை என்.எஸ்.ஏ. திருடியிருப்பதாக அண்மை யில் தகவல்கள் வெளியாகின. எனவே பிரதமர் மன்மோகன் சிங்கின் செல் போன் உரையாடல்களும் என்.எஸ்.ஏ. அமைப்பால் ஒட்டு கேட்கப்பட்டிருக் கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து பிரதமர் அலுவலத்தில் செய்தியாளர்கள் விளக்கம் கோரிய போது அந்த அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் அளித்த பதில்:
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போனே கிடையாது. செல் போனை அவர் பயன்படுத்துவதும் இல்லை. எனவே அவரது செல்போன் ஒட்டு கேட்கப்பட்டிருக்குமோ என்ற கவலையே நமக்குத் தேவை யில்லை.
இதேபோல் அவருக்கு இ-மெயில் முகவரியும் கிடையாது. எனவே, இ-மெயில் தகவல் திருட்டுக்கும் வாய்ப்பில்லை. பிரதமர் அலுவலக இ-மெயில் முகவரியை மட்டுமே மன்மோகன் சிங் பயன்படுத்தி வருகிறார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT