Published : 24 Oct 2013 04:08 PM
Last Updated : 24 Oct 2013 04:08 PM
ஆந்திராவில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக கடலோர ஆந்திரம், ராயலசீமா பகுதிகளில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 10 பேர் பலியாகியிருக்கின்றனர்.
கனமழை காரணமாக பாகதுவா, வம்சதாரா ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
மாநில வருவாய் அமைச்சர் என்.ரகுவீர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசிய போது: 19 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,6000 பேர் மழை நிவாரன முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சேத விவரங்கள் குறித்து தெரிவிக்கையில்: 2.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், கோதுமை, பருத்தி, சோளம் போன்ற பயிர்கள் சேதமடைந்ததாக தெரிவித்தார். 300 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT