Published : 07 Aug 2014 09:11 AM
Last Updated : 07 Aug 2014 09:11 AM

இந்தியாவில் தொடர்ந்து வசிக்க தஸ்லிமா விருப்பம்

இந்தியாவிலேயே தொடர்ந்து வசிக்க விரும்புகிறேன் என்று வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது:

தாய் நாடான வங்கதேசத்தில் என்னை மீண்டும் அனுமதித்தால் கூட அங்கு செல்ல மாட்டேன். இரண்டாவது தாய் நாடாக கருதும் இந்தியாவில்தான் தொடர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். எனக்கு ஐரோப்பிய குடியுரிமை உள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையும் பெற்றுள் ளேன். எனினும் கலாசார பின்னணியின் அடிப்படையில் இந்தியாவையே விரும்புகிறேன். இங்குதான் மீதமுள்ள வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தி யாவில் பல நல்ல நண்பர்களைப் பெற்றுள்ளேன். உறவினர்களுடன் வசிப்பது முக்கியமல்ல. நமது பேச்சில் நம்பிக்கை உள்ள வர்கள் அனைவருமே நமது குடும்பத்தினர்தான். வங்கதேச பதிப்பகத்தினரும், சிந்தனை யாளர்களும் என்னிடம் தொடர்பில் இருக்க விரும்பவில்லை. எனவே அந்நாட்டுடன் எனது தொடர்பு முறிந்துவிட்டது.

நான் இந்தியாவில் தங்குவதற்காக நீண்ட கால விசாவை உள்துறை அமைச்சகம் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கொல்கத்தாவிலும், ஹைதராபாதிலும் மத அடிப்படை வாதிகள் என்னை தாக்கினர். டெல்லியில் சிறிது காலம் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டேன்.

2007-ல் மேற்கு வங்கத்தில் இருந்து என்னை வெளியேற்றியது போன்ற பல சூழ்நிலைகளில் குஜராத் முதல்வராக இருந்த மோடி எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று தஸ்லிமா கூறினார்.

தஸ்லிமாவுக்கு இப்போது 51 வயதாகிறது. 1993-ல் லஜ்ஜா (அவமானம்) என்ற தனது வங்க மொழி நாவலை தஸ்லிமா வெளியிட்டார். இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் சிறுபான் மையினரான இந்துக்கள் மீது அங்குள்ள முஸ்லிம்கள் நிகழ்த் திய வன்முறைகள், இந்து பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகள், இந்துக்களை கொடூரமாக முஸ்லிம்கள் கொன்றது, நூற்றுக்கணக்கான கோயில்களை இடித்து தள்ளியது போன்றவற்றை நாவலில் தஸ்லிமா சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனால் வங்கதேச அடிப்படைவாத முஸ்லிம்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தஸ்லிமா வுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து 1994-ல் அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்த அவர், பின்னர் இந்தியாவுக்கு வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x