Published : 29 Jun 2017 07:59 AM
Last Updated : 29 Jun 2017 07:59 AM
ஏழாவது ஊதியக் குழுவின் அலவன்ஸ் தொடர்பான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
ஏழாவது ஊதியக் குழு 197 வகையான அலவன்ஸ்கள் குறித்து ஆய்வு செய்து 53 அலவன்ஸ்களை ரத்து செய்ய வும் 37 அலவன்ஸ்களை இணைக் கவும் பரிந்துரை செய்தது. இதுதொடர்பாக பல்வேறு துறைகளின் செயலாளர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஆய்வு செய்து கடந்த 1-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை குறித்து டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதி யில் 34 திருத்தங்களுடன் 7-வது ஊதியக் குழுவின் அலவன்ஸ் பரிந்துரைகளுக்கு அமைச் சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்படி வீட்டு வாடகைப்படி உட்பட பல்வேறு அலவன்ஸ்கள் உயர்கின்றன. இந்த அலவன்ஸ் உயர்வு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் 34 லட்சம் பேரும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 14 லட்சம் பேரும் பலன் அடைவார்கள். மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,748 கோடி கூடுதலாக செலவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT