Published : 28 Jun 2017 10:18 AM
Last Updated : 28 Jun 2017 10:18 AM
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார் இன்று (ஜூன் 28) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பிஹார் முன் னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில், மாபெரும் தலித் தலைவர் ஜகஜீவன் ராமின் மகளும் மக்களவை முன்னாள் சபாநாயகருமான மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மீரா குமார் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
17 எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மீரா குமார் அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நேற்று செய்தி யாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, “எதிர்க்கட்சிகள் தங்கள் கொள்கையின் அடிப்படையில் என்னை வேட்பாளராக தேர்வு செய்துள்ளன. ஜனநாயக நெறிகள், அனைவருக்குமான வளர்ச்சி, சமூக நீதி, பத்திரிகை சுதந்திரம், வெளிப்படையான நிர்வாகம், வறுமை ஒழிப்பு, சாதி அமைப்பு முறையை தகர்த்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இந்த ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகளை நான் மனப்பூர்வமாக நேசிக்கிறேன். இதன் அடிப்படையில் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இத்தேர்தலை இரு தலித் வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாகக் கருதக் கூடாது. இத்தேர்தலில் சாதி அடிப்படையில் நான் போட்டியிடவில்லை. கொள்கை அடிப்படையிலே போட்டியிடுகிறேன்.
இதற்கு முன் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்களில் வேட்பாளர் களின் சாதி குறித்து விவாதிக் கப்படவில்லை. அவர்களின் பண்புகள், தகுதிகள் மற்றும் சாதனைகள் மட்டுமே விவாதிக் கப்பட்டன. ஆனால் தலித் போட்டியிடும்போது, அவரது சாதி முதலில் விவாதிக்கப்படுகிறது. அதன் பிறகே அவர்களின் பண்புகள் விவாதிக்கப்படுகின்றன. 2017-ல் சமூகம் எவ்வாறு சிந்திக்கிறது என்பதை நான் தெளிவாக பார்க்க முடிகிறது.
சாதி அமைப்பு முறையை நாம் சவப்பெட்டியில் வைத்து ஆழமாக புதைக்க வேண்டும், நமது சமூகம் முன்னேறிச் செல்லவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நம் நாட்டில் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இப்போதும் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு எதிராகவே நான் போரிடுகிறேன்” என்றார்.
குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கவிருப்ப தாக மீரா குமார் கூறினார். அவர் வரும் 30-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குவார் எனத் தெரிகிறது.
மீரா குமார் மேலும் கூறும் போது, “காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில் ஒருவர் அதிக வலிமை பெற முடியும். எனவே எனது பிரச்சாரத்தை அங்கிருந்து தொடங்குகிறேன்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஆதரவை கோருவது குறித்து இதுவரை முடிவு செய்ய வில்லை. என்றாலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியுள்ளேன். மக்களவை சபாநாயகராக இருந்து நான் செயல்பட்ட விதத்தை அனைத்து எம்.பி.க்களும் பாராட்டியுள்ளனர். பாரபட்சமாக நடந்துகொள்வதாக யாரும் புகார் கூறியதில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT