Published : 28 Jun 2017 10:10 AM
Last Updated : 28 Jun 2017 10:10 AM
திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருந்து பிறகு சுவாமியை தரிசிக்கின்றனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பல மணி நேரம் இந்த காம்ப்ளக்ஸில் பக்தர்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் இங்கு பால், டீ, சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் முதியோருக்கு அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படு கிறது. ஆதலால், பால், டீ, சிற்றுண்டி ஆகியவற்றுடன் 24 மணி நேரம் மருத்துவ வசதியும் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரி நிவாச ராஜு நேற்று உத்தரவிட்டார். மேலும், வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக தொலைபேசி வசதியும் விரைவில் செய்து தரப்பட உள்ளது.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் படித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT