Published : 27 Sep 2013 11:47 AM
Last Updated : 27 Sep 2013 11:47 AM
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் புதன்கிழமை சம்மன் பிறப்பித்தது.
பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சம்மன் அங்கேயே வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
கடந்த 1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, தில்லி மற்றும் பஞ்சாபில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வாழ் சீக்கியர்கள் அமைப்பான எஸ்எப்ஜே சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 24 பக்கங்களைக் கொண்ட அந்த மனுவில் பயங்கரவாதிகள் என்ற பெயரில் சீக்கியர்களைக் கொன்ற பாதுகாப்புப் படையினருக்கு 1990களில் மத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் ரொக்கப் பரிசு வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 2004ஆம் ஆண்டு பிரதமர் பொறுப்பை ஏற்றபோது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்குக் காரண மானவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதாகவும், இதன்மூலம் அவர் மனித உரிமையை மீறி உள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காங்கிரஸ் சார்பாக ஆஜராகி வரும் அட்டர்னி ஜெனரல் ரவி பத்ரா கூறுகையில், "பிரதமர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT