Published : 23 Jun 2017 09:37 AM
Last Updated : 23 Jun 2017 09:37 AM
பிஹார் மாநிலம் முங்கர் மாவட்டம், காரகுர் பகுதி மாவோயிஸ்டு கமாண்டராக இருந்தவர் பீர்பால் முர்மு. கண்டானி வனப்பகுதியில் இவர் 93 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் சில ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதன்பின் 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் பகூர் மாவட்டத்தில் முர்முவை போலீஸார் கைது செய்த னர். அவர் மீது வெடிப்பொருட்கள் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முர்முவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி புருஷோத்தம் மிஸ்ரா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT