Published : 07 Sep 2014 03:11 PM
Last Updated : 07 Sep 2014 03:11 PM

விதிகளை மீறியுள்ளார் வி.கே.சிங்: ராணுவத் தீர்ப்பாயம் குற்றச்சாட்டு



புது டெல்லி

இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டு ராணுவத்தின் கண்ணியத்தை குலைத்துள்ளார், விதிகளை மீறியுள்ளார் என்று ராணுவத் தீர்ப்பாயம் குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கம் சுக்னாவில் ராணுவத்துக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்தில் தனியார் கல்வி நிறுவனம் கட்டப்பட்டது தொடர்பாக லெப்டினென்ட் ஜெனரல் ராத் மீது புகார் கூறப்பட்டது.

இந்தப் புகாரை விசாரித்த ராணுவ நீதிமன்றம், ராத்தின் 2 ஆண்டுகள் பணி மூப்பை குறைத் தும் 15 ஆண்டுகள் ஓய்வூதியச் சலுகைகளை ரத்து செய்தும் 2011-ல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ராணுவ தீர்ப்பாயத்தில் ராத் மனு செய்தார்.

இம்மனுவை விசாரித்த ராணுவ தீர்ப்பாயம், வி.கே. சிங் பழி வாங்கும் நோக்கத்தோடு செயல் பட்டு ராணுவத்தின் கண்ணியத்தை குலைத்துள்ளார். விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளார்,என்று தெரிவித்துள்ளது மேலும் ராத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தர விட்டது. அவருக்கான ஓய்வூதியச் சலுகைகளை 12 சதவீத வட்டியுடன் அளிக்க அறிவுறுத்திய தீர்ப்பாயம், ரூ.1 லட்சம் வழங்கவும் ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

ராணுவ தீர்ப்பாயத்தின் உத்தரவு தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கும் வி.கே. சிங்கிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து வி.கே. சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார்.



வி.கே.சிங், ராணுவத் தீர்ப்பாயம், ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x