Published : 11 Sep 2014 08:33 PM
Last Updated : 11 Sep 2014 08:33 PM

அனுமாருக்கு ஆதார் அட்டை: ராஜஸ்தானில் ருசிகரம்

இன்னும் கொஞ்ச நாளில் இருக் கின்ற க‌டவுள்களும் தங்களுக் கென்று தனித் தொகுதிகள் கேட்கும் போல. அதற்கு முன்னோட்டமாக அனுமாருக்கு ஆதார் அட்டை கிடைத்துள்ளது.

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் தந்தரம்கர் என்ற இடத்தில் ஹிராலால் தபால்காரராகப் பணி யாற்றுகிறார்.

அவரிடம் செப்டம்பர் 6ம் தேதி பெங்களூரில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று வந்தது. அதில் 2094705195411 என்ற எண்ணும், அனுமாரின் படமும் பொறிக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை இருந்தது.

பவான் என்பவரின் மகன் என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த அடை யாள அட்டையில் கைப்பேசி எண்ணும் பெருவிரல் ரேகையும் இருந்தன. ஆனால் இந்த அட்டையைப் பெறுவதற்கு அந்தப் பகுதியில் யாரும் முன்வரவில்லை.

அதன் பிறகு விசாரணை மேற் கொண்டத்தில் விகாஸ் என்பவர் இந்த அட்டைக்காக விண்ணப்பித் திருந்தார் என்பது மட்டும் தெரிய வந்தது.

யாருமே இந்த ஆதார் அட்டையைப் பெற முன்வராததால், அது மீண்டும் பெங்களூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x