Published : 04 Sep 2014 08:54 AM
Last Updated : 04 Sep 2014 08:54 AM
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை யின் சார்பில் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) இணைப்பு அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா முழு ஆதரவு தெரிவித் துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு விரைவில் கையெழுத்திடும் எனத் தெரிகிறது.
இது குறித்து, ‘தி இந்து’விடம் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறிய தாவது: நாடு முழுவதும் அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் கண்ணாடி இழை வடம் (ஆப்டிகல் ஃபைபர் கேபிள்) பதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகளின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு வசதியை ஏற்படுத்தும் மத்திய அரசின் ‘ஜன் தன்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடந்த வாரம் சென்னைக்கு சென்றிருந்தார்.
அப்போது, அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தி னார். இதையடுத்து, அகண்ட அலைவரிசை இணைப்பு திட்டத்துக்கு ஆதரவு அளிப்ப தாக ரவிசங்கர் பிரசாத்திடம் ஜெய லலிதா உறுதி அளித்துள்ளார். எனவே, இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கிடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத் தாகும் என அமைச்சக வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
அகண்ட அலைவரிசை இணைப்பு திட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வகுக்கப்பட்டது. ஆனால் இதை அமல்படுத்துவதில் அந்த அரசு தீவிரம் காட்டவில்லை. அத்துடன் பல மாநிலங்களுடன் சுமுக உறவு இல்லாமல் போன தும் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே சுமுக உறவு இல்லாததால் இதுதொடர்பாக அனுமதி கிடைப்ப தில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
நாடு முழுவதும் ‘டிஜிட்டல் இந்தியா’வாக மாற்றப்படும் என பிரதமர் நரேந்தர மோடி கூறியுள்ளார். இதற்கு அகண்ட அலைவரிசை இணைப்பு மிகவும் அவசியமாகிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டால், தமிழகத்தின் அனைத்து கிராமங் களுக்கும் அதிவேக இன்டர்நெட் இணைப்பு கிடைத்துவிடும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக் கும் இடையே சுமுக உறவு இருப்பதால் இந்த திட்டம் சாத்திய மாகும் சூழல் உருவாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT