Last Updated : 18 Nov, 2025 12:16 PM

 

Published : 18 Nov 2025 12:16 PM
Last Updated : 18 Nov 2025 12:16 PM

‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ - தேஜஸ்வி - ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!

மகள் ரோகிணி ஆச்சார்யா, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரடன் லாலு பிரசாத் யாதவ் | கோப்புப் படம்

பாட்னா: தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க வேண்டும். பிஹார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ள நிலையில், ஆர்ஜேடி சரியாக 25 இடங்களை வென்றதால் எதிர்க்கட்சியாக தேர்வாகியுள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று (திங்கள்) பாட்னாவில் நடைபெற்றது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ், ஜக்தானந்த் சிங், லாலுவின் மூத்த மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ரகோபூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற தேஜஸ்வி யாதவ், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த கூட்டத்தில், தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யா இடையேயான மோதல் குறித்தும் பேச்சு எழுந்தது. அப்போது பேசிய லாலு பிரசாத் யாதவ், “இது குடும்பத்தின் உள் விவகாரம். இது குடும்பத்துக்குள்ளேயே தீர்க்கப்படும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் மிகவும் கடினமாக உழைத்ததாக லாலு பிரசாத் யாதவ் பாராட்டு தெரிவித்தார். அவரால் மட்டுமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 14-ம் தேதி வெளியாகியது. இதையடுத்து, கட்சியில் இருந்தும், தனது குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக ரோகிணி ஆச்சார்யா கடந்த 15-ம் தேதி அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நான் அரசியலைவிட்டு வெளியேறுகிறேன். மேலும், எனது குடும்பத்தில் இருந்தும் விலகுகிறேன். சஞ்சய் யாதவும், ரமீஸும் இதைத்தான் என்னிடம் கேட்டார்கள். எல்லா பழிகளையும் நான் ஏற்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

தேஜஸ்வி யாதவின் நம்பிக்கைக்கு உரியவர்களான சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோரின் பெயர்களை ரோகிணி ஆச்சார்யா வெளியிப்படுத்தியதை அடுத்து, 16-ம் தேதி அவருக்கும் அவரது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கும் இடையே சண்டை மூண்டது. அப்போது, “தேர்தல் தோல்விக்கு நீ தான் காரணம். உன்னால்தான் நாங்கள் சபிக்கப்பட்டோம்.” என்று தேஜஸ்வி யாதவ் கூச்சலிட்டதாகவும், அவர் மீது செருப்பை எரிந்ததாகவும் தகவல் வெளியானது.

பின்னர் இது குறித்து ரோகிணி வெளி​யிட்ட பதிவு​களில், “நேற்று (சனிக்​கிழமை) ஒரு மகள், சகோ​தரி, மனை​வி, ஒரு தாய் அவம​திக்​கப்​பட்​டாள். மிக​வும் மோச​மான வார்த்​தைகளால் திட்​டப்​பட்​டாள். (தேஜஸ்வி) காலணியை கழற்றி அடிக்​க​வும் முயற்சி செய்​தனர். ஆனால் நான் சுயமரி​யாதையை விட்​டுக் கொடுக்​கவில்​லை. வேறு வழி​யின்றி கண்​ணீர்​விட்டு நின்ற பெற்​றோரை​யும், சகோ​தரி​களை​யும் விட்டுப் பிரிந்து வந்​தேன்.

எனது தாய் வீட்​டில் இருந்து என்னை வெளி​யேற்​றி​விட்​டனர். நான் ஆதர​வற்று நிற்​கிறேன். எனது பாதையை வேறு யாரும் தேர்வு செய்ய வேண்​டாம். எந்​தவொரு குடும்​பத்​தி​லும் ரோகிணி போன்ற பெண் பிறக்கக் கூடாது. நான் மோச​மானவள், அழுக்​கானவள் என்று குற்​றம் சாட்​டினர். எனது தந்​தைக்கு (லாலு) சிறுநீரகத்தை கொடுத்​து, கோடிக்​கணக்​கில் பணத்தை பெற்​றுக் கொண்​ட​தாக​வும் தேர்​தலில் சீட்​களை பெற்​றுக் கொண்​டதாக​வும் குற்​றம் சுமத்​தினர்.

திரு​மண​மான அனைத்து பெண்​களுக்​கும் ஓர் அறி​வுரையை கூற விரும்​பு​கிறேன். உங்​கள் வீட்​டில் அண்ணன், தம்பி இருந்​தால் தவறு​தலாககூட உங்​கள் தந்​தையை காப்​பாற்ற முயற்சி செய்ய வேண்​டாம். தம்​பியோ, அண்​ணனோ அல்​லது அவரது ஹரி​யானா நண்​பரையோ (தேஜஸ்​வி​யின் நண்​பர் சஞ்​சய் யாதவ்) சிறுநீரகத்தை தானம் செய்யச் சொல்​லுங்​கள்.

திரு​மண​மான பெண்​கள் அவர​வர் குடும்ப நலன்​களில் மட்​டுமே அக்​கறை செலுத்த வேண்​டும். உங்​கள் கணவர், பிள்​ளை​கள் மீது மட்​டும் அக்​கறை செலுத்​துங்​கள். எனது தந்​தை​யின் குடும்​பத்​துக்​காக எனது 3 பிள்​ளை​களை சரி​யாக கவனிக்​க​வில்​லை. நான் மாபெரும் தவறு செய்​து​விட்​டேன்.

எனது கணவர், அவரின் உறவினர்​கள் அறி​வுரையை மீறி எனது தந்​தைக்கு சிறுநீரகத்தை தான​மாக வழங்​கினேன். எனது கணவரின் பேச்சை கேட்​க​வில்​லை. கடவுள் போன்ற எனது தந்​தையை காப்​பாற்ற சிறுநீரகத்தை தான​மாக வழங்​கினேன். அதற்கு நன்​றிக்​கட​னாக என்னை மோச​மானவள் என்று சபிக்​கின்றனர். நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்​டாம்​. என்​னைப்​ போன்​ற மகளாக யாரும்​ இருக்​க வேண்​டாம்.” என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x