Published : 18 Nov 2025 07:46 AM
Last Updated : 18 Nov 2025 07:46 AM

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

புதுடெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார். இதில், 13 பேர் உயி​ரிழந்​தனர்.

இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் முக்​கிய குற்​ற​வாளி​யாக சந்​தேகிக்​கப்​பட்ட மருத்​து​வர் ஷாகின் சயீத் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பாகிஸ்​தானைச் சேர்ந்த ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்​பின் பெண்​கள் பிரி​வின் தலை​வ​ராக இந்​தி​யா​வில் செயல்​பட்​டது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவரது செல்​போனை ஆராய்ந்​த​தில் வாட்​ஸ்​அப் மெசேஜ்கள் அழிக்​கப்​பட்​டிருந்​தன. அது மீட்​டெடுக்​கப்​பட்டு ‘‘மேடம் எக்​ஸ், மேடம் இசட்’’ என்ற இரண்டு பெண்​களிடம் ஷாகின் தொடர்ச்​சி​யாக பேசி வந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இவர்​களுக்கு இடை​யில் குறி​யீட்டு சொற்​களின் வழி​யாக தீவிர​வாத தகவல்​களை பரி​மாறி வந்​துள்​ளனர். மருத்​து​வர் ஷாகினை ‘‘மேடம் சர்​ஜன்’’ என்று
அவர்​கள் அழைத்​துள்​ளனர்.

மேடம் எக்​ஸ், மேடம் இசட் ஆகிய இரண்டு எண்​களிட​மிருந்து ஷாகினுக்கு தொடர்ச்​சி​யாக அழைப்பு மற்​றும் செய்​தி​கள் வந்​துள்​ளன. அதில், 'மெடிசின்' என்ற வார்த்​தையை அடிக்​கடி சாட் செய்​துள்​ளனர். இது, வெடிமருந்தை குறிக்​கும் குறி​யீட்டு சொல்​லாக பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

மேடம் எக்​ஸ், ஷாகினுக்கு அனுப்​பி​யுள்ள ஒரு செய்​தி​யில், “ஆபரேஷனுக்கு மருந்து பற்​றாக்​குறை இருக்​கக்​கூ​டாது’’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில், ஆபரேஷன் என்ற சொல் தீவிர​வாத தாக்​குதலின் குறி​யீட்டு சொல்​லாக பயன்​படுத்​தப்​பட்டு இருக்​கலாம் என்ற சந்​தேகம் ஏற்​பட்​டுள்​ளது.

மேலும், மேடம் இசட் அனுப்​பிய மற்​றொரு செய்​தி​யில், “மேடம் சர்​ஜன், தயவு செய்து ஆபரேஷன் ஹாம்​டார்​டில் அதிக கவனம் செலுத்​துங்​கள்’’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. வழக்​க​மாக ஆபரேஷன் ஹாம்​டார்ட் என்ற சொல் அவர்​களது இயக்​கத்​துக்கு பெண் தீவிர​வா​தி​களை சேர்ப்​பதை குறிக்​கிறது என்று வி​சா​ரணை அதிகாரிகள் தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x