Published : 17 Nov 2025 08:26 AM
Last Updated : 17 Nov 2025 08:26 AM

ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) கட்​சி​யின் தலை​வர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்கு வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை.

இதன் காரண​மாக அவர் கடந்த மாதம் சட்​டையை கிழித்​துக்​கொண்டு அழுது தனது விரக்​தியை வெளிப்​படுத்​தி​னார். மேலும், ஆர்​ஜேடி கட்சி 25 இடங்​களுக்கு மேல் தேறாது என்ற சாபத்​தை​யும் வழங்​கி​னார். இவர் வயிறு எரிந்து விட்ட சாபத்​தைப் போலவே ஆர்​ஜேடி 25 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது.

இதுகுறித்து அவர் நேற்று கூறுகை​யில், “எனக்கு தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு வழங்​க​வில்லை என்ற மனவலி பைத்​தி​யம்​பிடிக்க வைத்​து​விட்​டது. எனது சாபத்​தைப் போலவே சரி​யாக 25 தொகு​தி​களில் மட்​டுமே ஆர்​ஜேடி வெற்​றி​பெற்​றுள்​ளது. எனினும், ஆர்​ஜேடி படு​தோல்​வியை சந்​தித்​துள்​ளது உண்​மை​யில் எனக்கு மனவேதனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x