Published : 17 Nov 2025 07:11 AM
Last Updated : 17 Nov 2025 07:11 AM

1989ம் ஆண்டு பிஹார் கலவரத்தை சுட்டிக் காட்டிய அசாம் அமைச்சர்: சசி தரூர் கண்டனம்

குவாஹாட்டி: அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்​கத்​தின் ஒரு பகு​தி​யாக கடந்த 1989-ம் ஆண்டு அக்​டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்​பூர் பகு​தி​யில் விஎச்பி சார்​பில் பேரணி நடை​பெற்​றது.

அப்​போது பேரணி​யாக சென்​றவர்​கள் மீது சிலர் கற்​களை வீசி தாக்​குதல் நடத்​தினர். இதன்​ காரண​மாக கடந்த 1989-ம் ஆண்டு அக்​டோபர் 24-ம் தேதி பாகல்​பூர் மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் இந்​து, முஸ்​லிம்​ இடையே கலவரம் ஏற்​பட்​டது. இதில் 100-க்​கும் மேற்​பட்ட முஸ்​லிம்​கள் உயி​ரிழந்​தனர். அவர்​களின் உடல்​கள் அங்​குள்ள காலிபிளவர் தோட்​டத்​தில் புதைக்​கப்​பட்​டன. இதன்​ காரண​மாக இது, “காலி பிளவர் புதைப்பு வழக்​கு" என்று அழைக்​கப் படு​கிறது.

இந்த சூழலில் அசாம் சுகா​தார மற்​றும் குடும்ப நலத்​துறை அமைச்​சர் அசோக் சிங்​கால் தனது சமூக வலை​தளத்​தில் காலிபிளவர் புகைப்​படத்தை பதி​விட்​டு, "காலி பிளவர் விவ​சா​யத்​துக்கு பிஹார் ஒப்​புதல் வழங்​கி​யிருக்​கிறது" என்று குறிப்​பிட்டு உள்​ளார். இந்த பதிவு குறித்து அவர் வேறு எந்த விளக்​க​மும் அளிக்​க​வில்​லை. கடந்த 1989-ம் ஆண்டு பிஹார் கலவரத்​தையே அமைச்​சர் அசோக் சிங்​கால் மறை​முக​மாக சுட்​டிக் காட்​டி​யிருப்​ப​தாக பலரும் குற்​றம் சாட்டி வரு​கின்​றனர்.

இதுகுறித்து காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் நேற்று சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “என்னை இந்து என்று அழைப்​ப​தில் மிகுந்த பெரு​மிதம் கொள்​கிறேன். அதே​நேரம் அனைத்து தரப்​பினரை​யும் உள்​ளடக்​கிய இந்​தி​யா​வின் தீவிர ஆதர​வாள​ராக​வும் நான் செயல்​படு​கிறேன். நானோ, எனது மதமோ, எனது நாடோ வன்​முறை, படு​கொலைகளை ஒரு​போதும் ஆதரிப்​பது கிடை​யாது" என்​று தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x