Published : 15 Nov 2025 12:10 AM
Last Updated : 15 Nov 2025 12:10 AM
பாட்னா: பிஹார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: லாலு பிரசாத் ஆட்சிக் காலத்தில் பிஹாரின் ஜெகானாபாத்தில் தினமும் படுகொலைகள் அரங்கேறின. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஜெகானாபாத் தற்போது அமைதி பூங்காவாக மாறியிருக்கிறது. இங்கு கோகு தொகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தோம். அப்போது குந்திதேவி பாஸ்வான் என்ற மூதாட்டி எங்களை வழிமறித்து நிறுத்தினார்.
‘துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவோம் என்று மிரட்டினால்கூட பிரதமர் மோடிக்கு மட்டுமே வாக்களிப்போம். அவர்தான் எங்களுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்களை வழங்குகிறார். ஏழைகளுக்கு இலவசமாக வீடுகளை கட்டித் தருகிறார். அவருக்கு மட்டுமே வாக்களிப்போம்' என்று மூதாட்டி கூறினார். இவரை போன்ற பிஹார் பெண்களின் ஞானமே, தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு மூல காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT