Published : 14 Nov 2025 08:38 AM
Last Updated : 14 Nov 2025 08:38 AM

சுவிஸ் செயலியை பயன்படுத்திய மருத்துவர்கள்

புதுடெல்லி: டெல்லி கார் வெடிகுண்டு தாக்​குதலில் ஈடு​பட்ட மருத்​து​வர்​கள் ‘திரீமா’ என்ற சுவிஸ் செயலியைப் பயன்​படுத்​தி​யது தெரியவந்​துள்​ளது.

டெல்லி கார் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​கள் உமர் நபி, முஜம்​மில், ஷாகின் ஆகியோர் திட்​ட​மிட்டு இந்த சதி செயலில் ஈடு​பட்​டுள்​ளனர். இதில் உயி​ரிழந்த உமர் பரி​தா​பாத்​தில் இருந்து டெல்லி செங்​கோட்டை வரை காரில் சென்​றது, பல்​வேறு சிசிடிவி கேம​ராக்​களில் பதி​வாகி உள்​ளது.

மேலும், இந்த 3 பேரும் சுவிட்​சர்​லாந்தின் ‘திரீமா’ செயலியைப் பயன்​படுத்தி சதி திட்​டம் தொடர்​பாக கலந்​துரை​யாடி உள்​ளனர். இந்த செயலி பாது​காப்​பான​தாக கூறப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x