Published : 14 Nov 2025 07:57 AM
Last Updated : 14 Nov 2025 07:57 AM

டெல்லி குண்​டு​வெடிப்பு சம்​பவம்: புதிய சிசிடிவி காட்​சிகள்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த குண்​டு​வெடிப்பு சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸாருக்கு புதி​தாக சிசி​விடி காட்​சிகள் கிடைத்​துள்​ளன.

குண்​டு​வெடிப்பு சம்​பவம் நடப்​ப​தற்கு சில விநாடிகள் முன்பு ஆட்​டோக்​கள், இ-ரிக்சா உள்​ளிட்ட வாக​னங்​களுக்கு இடையே வெடிகுண்​டு​கள் இருந்த ஐ20 கார் சாலை​யில் மெது​வாக நகர்ந்து வரு​கிறது. அப்​போது காரிலிருந்த குண்டு வெடிக்கிறது.

அடுத்த சில விநாடிகளி​லேயே மிகப்​பெரிய தீப்​பிழம்பு ஏற்​பட்டு தீ மளமளவென அருகில் இருந்த கார்களுக்கு பரவுகிறது. அங்கிருந்து அதிக அளவி​லான புகை வெளிவரும் அந்​தக் காட்​சி​யில் பதி​வாகிறது. இந்​தக் காட்​சிகளை வைத்து என்ஐஏ அதி​காரி​கள்​ தற்​போது தீவிர வி​சா​ரணை​யைத்​ தொடங்​கி​யுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x