Published : 14 Nov 2025 06:50 AM
Last Updated : 14 Nov 2025 06:50 AM

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஸ்ரீநகர்: ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்​பவத்​தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்​டர்​கள் ஈடு​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இது ஒயிட் காலர் தீவிர​வாத சதி என அழைக்​கப்​படு​கிறது. இது தொடர்​பாக டாக்​டர்​கள் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த வழக்கை என்ஐஏ விசா​ரித்து வரு​கிறது.

டெல்லி சம்​பவத்தை அடுத்​து, காஷ்மீர் முழு​வதும் போலீ​ஸார் உள்​ளிட்ட பாது​காப்​புப் படை​யினர் தீவிர சோதனை நடத்தி வரு​கின்​றனர். இது​வரை சந்​தேகத்​தின் பேரில் 200 பேரிடம் விசா​ரணை நடத்தி உள்​ளனர். இந்​நிலை​யில், அனந்த்​நாக், புல்​வா​மா, குல்​காம் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் நேற்று நடத்​திய சோதனை​யின்​போது 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து விசா​ரித்து வரு​கின்​றனர். அவர்​களிட​மிருந்து சில டிஜிட்​டல் சாதனங்​கள் மற்​றும் சில ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன. இந்த தகவலை காவல் துறை உயர் அதி​காரி​கள் வட்​டாரம்​ தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x