Published : 12 Nov 2025 12:59 AM
Last Updated : 12 Nov 2025 12:59 AM

ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாதியான மருத்துவர் ஆதில்

புதுடெல்லி: ​காஷ்மீர் புல்​வாமா மாவட்​டம் குல்​காமின் காஜிகுண்ட் பகு​தி​யைச் சேர்ந்​தவர் மருத்​து​வர் ஆதில் அகமது. இவர், உ.பி. சஹாரன்​பூரில் பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி​னார். தீவிர​வாத சதி தொடர்​பான சந்​தேகத்​தின் பேரில், காஷ்மீர் போலீ​ஸார் கடந்த 6-ம் தேதி சஹாரன்​பூருக்கு வந்து ஆதிலை கைது செய்​தனர். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் காஷ்மீர் அனந்​த​நாக் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 3 ஆண்​டு​கள் பட்​டமேற்​படிப்பு படித்​தது தெரிய வந்​தது.

மருத்​து​வ​மனை​யில் காலி செய்​யாமல் வைத்​திருந்த ஆதில் லாக்​கரிலும் சோதனை நடத்​தப்​பட்​டது. அதில், ஏகே 47 துப்​பாக்கி உள்​ளிட்ட சில சட்​ட​விரோத பொருட்​கள் சிக்​கின. சஹாரன்​பூர் மருத்​து​வ​மனை​யில் ஆதில் ரூ.5 லட்​சம் மாத ஊதி​யம் பெற்​றுள்​ளார். கடந்த அக்​டோபர் 4-ம் தேதி ஆதி​லுக்கு திரு​மணம் நடந்​துள்​ளது. அப்​போது குறிப்​பிட்ட சிலரை மட்​டுமே அவர் திரு​மணத்​துக்கு அழைத்​துள்​ளார். அவர்​களில் முக்​கிய​மானவ​ராக கருதப்​படும் மருத்​து​வர் பாபர் அகமது​விட​மும் போலீ​ஸார் தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x