Last Updated : 11 Nov, 2025 10:39 AM

 

Published : 11 Nov 2025 10:39 AM
Last Updated : 11 Nov 2025 10:39 AM

பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவு

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் முதல்​கட்​ட​மாக 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்​ற நிலையில் மீதமுள்ள 122 தொகு​தி​களுக்​கான 2-வது மற்றும் இறு​திக்​கட்ட வாக்குப்​பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடை​பெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பிஹாரின் புர்னியா மாவட்டத்தில் 15.54% வாக்குப்பதிவாகியுள்ளது.

முதல்​கட்ட தேர்​தலில் பிஹார் வரலாற்​றில் முதல்​முறை​யாக சுமார் 7 சதவீத வாக்​கு​கள் கூடு​தலாகப் பதிவாகின. பிஹாரில் இரண்​டாம் கட்ட தேர்​தலிலும் பெண்​களின் பங்​கேற்பு அதி​க​மாக இருக்​கும் என எதிர்பார்க்​கப்​பட்ட நிலையில், காலை 9 மணி நிலவரம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுவதை உறுதி செய்துள்ளது.

3.7 கோடி வாக்காளர்கள்; 1302 வேட்பாளர்கள்: தேர்​தல் ஆணை​யத் தரவு​களின்​படி, இரண்​டாம் கட்​டத்​தில் மொத்​தம் 3.7 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதில் 1,74,68,572 பேர் பெண்​கள் ஆவர். ஒவ்​வொரு தொகு​தி​யிலும் சராசரி​யாக 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் உள்​ளனர். 136 பெண்​கள் உட்பட 1,302 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

இன்று தேர்​தலை சந்​திக்​கும் 122 தொகு​தி​களில் மெகா கூட்​டணி சார்​பில் ஆர்​ஜேடி 70, காங்​கிரஸ் 37, விஐபி 8, சிபிஐ (எம்​எல்) 5, மார்க்​சிஸ்ட் 4, இந்​திய கம்​யூனிஸ்ட் 2 இடங்​களில் போட்​டி​யிடு​கின்​றன. மெகா கூட்​டணி கட்​சிகளுக்கு இடையே 5 தொகு​தி​களில் போட்டி நில​வு​கிறது. என்​டிஏ சார்​பில் பாஜக 52, ஜேடியு 45, எல்​ஜேபி 16, எச்​ஏஎம் 6, ஆர்​எல்​எம் 4 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன.

பிரஷாந்த் கிஷோர் 122 தொகு​தி​களி​லும் வேட்​பாளர்​களை நிறுத்தி உள்​ளார். ஒவைசி கட்சி சார்​பில் 2 இந்​து மற்​றும்​ 25 முஸ்​லிம்​கள்​ களத்​தில்​ உள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x