Published : 11 Nov 2025 08:14 AM
Last Updated : 11 Nov 2025 08:14 AM

தேர்தலுக்கு பின் அணி மாற மாட்டேன்: அமைச்சர் சிராக் பாஸ்வான் உறுதி

பாட்னா: மத்​திய அமைச்​சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்​சி​யின் தலை​வரு​மான சிராக் பாஸ்​வானிடம் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி அண்​மை​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

மெகா கூட்​ட​ணிக்கு வரு​மாறு சிராக் பாஸ்​வானுக்கு பிரி​யங்கா அழைப்பு விடுத்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. இதுதொடர்​பாக செய்தி நிறு​வனத்​துக்கு சிராக் பாஸ்​வான் அளித்த பேட்​டி​யில், "பிரி​யங்கா காந்​தி​யிடம் இயல்​பாக பேசுவேன். ஆனால் கூட்​டணி தொடர்​பாக அவரிடம் பேச்​சு​வார்த்தை நடத்​த​வில்​லை.

பிரதமர் நரேந்​திர மோடியை நான் மிக​வும் மதிக்​கிறேன், நேசிக்​கிறேன். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து விலக மாட்​டேன். பிஹார் தேர்​தலுக்​குப் பிறகு நிச்​சய​மாக அணி மாற மாட்​டேன். பிரதமர் மோடி மீதான எனது மதிப்​பும் அன்​பும் என்​றென்​றும் நிலைத்​திருக்​கும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x