Published : 11 Nov 2025 08:04 AM
Last Updated : 11 Nov 2025 08:04 AM

வங்கதேசத்தில் இருந்து தாக்குதல் நடத்த லஷ்கர் சதி

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்தது.

அப்போது பாகிஸ்தானின் லாகூர் அருகே முரித்கே பகுதியில் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் தலைமை அலுவலகம் தகர்க்கப்பட்டது. இதில் லஷ்கர் அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீதுவின் மகன் உட்பட நெருங்கிய உறவினர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பழிவாங்குவதற்காக, வங்கதேசத்தில் இருந்து இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த நாட்டு அரசு பாகிஸ்தானுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. இந்த சூழலில் ஹபீஸ் சயீதுவின் உத்தரவின்பேரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் வங்கதேசத்துக்கு சென்று அங்குள்ள தீவிரவாதிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x