Published : 11 Nov 2025 08:09 AM
Last Updated : 11 Nov 2025 08:09 AM

2 மருந்து நிறுவனங்களில் ரூ.2 கோடி மோசடி

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரைச் சேர்ந்த குரூப் பார்​மசூட்​டிக்​கல்ஸ் மற்​றும் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த டாக்​டர் ரெட்​டீஸ் லேபரட்​டரீஸ் இடையே போலி​யான இமெ​யிலை அனுப்பி சைபர் மோசடி கும்​பல் ரூ.2.16 கோடியை சுருட்​டி​ உள்ளது.

இழந்த பணத்தை மீட்​டுத் தரக்​கோரி குரூப் பார்​மசூட்​டிக்​கல்ஸ் நிறு​வனத்​தின் மூத்த நிர்​வாக அதி​காரி கே. மகேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் பெங்​களூரு சைபர் கிரைம் போலீ​ஸார் முதல் தகவல் அறிக்கை (எப்​ஐஆர்) பதிவு செய்​துள்​ளனர்.

இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறுகை​யில், “குரூப் பார்மா அதி​காரி கொடுத்த புகாரின் அடிப்​படை​யில் அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் மீது பிஎன்​எஸ் சட்​டத்​தின் பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது.

முதல் கட்ட விசா​ரணை​யில் மோசடிக்கு பயன்​படுத்​தப்​பட்ட வங்கி கணக்கு குஜ​ராத்​தின் வதோத​ரா​வில் தொடங்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. அங்​கிருந்து பல கணக்​கு​களுக்கு பணம் பிரி்த்து அனுப்​பப்​பட்​டுள்​ளது. நிதியை திருப்​பி​விட பயன்​படுத்​தப்​பட்ட அந்​தப் பிர​தான கணக்கு முடக்​கப்​பட்​டுள்​ளது. மொத்​த தொகை​யை​யும் திரும்​பப் பெற வங்​கி​களு​டன்​ பேசி வரு​கிறோம்​’’ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x