Published : 10 Nov 2025 08:35 AM
Last Updated : 10 Nov 2025 08:35 AM

ஹரியானாவில் பிளஸ் 1 மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: சக மாணவர்கள் கைது

பிரதிநிதித்துவப் படம்

சண்டிகர்: ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் பகுதி செக்​டர் 48-ஐ சேர்ந்த மாணவர், அங்​குள்ள பள்​ளி​யில் பிளஸ் 1 படித்து வரு​கிறார். அவருக்​கும் அதே பள்​ளி​யில் படிக்​கும் சக மாணவருக்​கும் இடையே இரு மாதங்​களுக்கு முன்பு மோதல் ஏற்​பட்டு உள்​ளது. இதன்​பிறகு இரு​வரும் இயல்​பாக பழகி வந்​துள்​ளனர்.

கடந்த சனிக்​கிழமை இரவு செக்​டர் 48-ஐ சேர்ந்த மாணவரை, சக மாணவர் தனது வீட்​டுக்கு வரவழைத்து உள்​ளார். அங்கு வேறொரு மாணவரும் இருந்​துள்​ளார். 3 மாணவர்​களும் சிறிது நேரம் பேசிக் கொண்​டிருந்​தனர். அப்​போது பழைய மோதல் விவ​காரம் மீண்​டும் எழுப்​பப்​பட்டு பெரும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

ஆத்​திரமடைந்த சக மாணவர் தனது தந்​தை​யின் கைத்​துப்​பாக்​கியை எடுத்து செக்​டர் 48 பகுதி மாணவரை குறி​வைத்து சுட்​டார். இதில் அவரது கழுத்​தில் குண்டு பாய்ந்து ரத்த வெள்​ளத்​தில் சரிந்​தார்.

தகவல் அறிந்து குரு​கி​ராம் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்​றனர். துப்​பாக்கி குண்டு காயமடைந்த மாணவரை மீட்டு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் அந்த மாணவர் சிகிச்சை பெற்று வரு​கிறார். அவரை துப்​பாக்​கி​யால் சுட்ட மாணவர் மற்​றும் அவரது நண்​பரை போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x