Last Updated : 10 Nov, 2025 08:25 AM

 

Published : 10 Nov 2025 08:25 AM
Last Updated : 10 Nov 2025 08:25 AM

பிஹார் தேர்தலில் ஜேஎம்எம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு இல்லை: ஜார்க்கண்டில் இண்டியா கூட்டணியில் பிளவு?

ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன்

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் லாலு​வின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலை​மை​யில் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​டணி அமைந்​தது.

இண்​டியா கூட்​ட​ணி​யின் பெரும்​பாலான கட்​சிகளை கொண்ட இக்​கூட்​ட​ணி​யில் ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன் தலை​மையி​லான ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்​எம்) கட்​சி​யும் இடம் பெற்​றுள்​ளது. ஆனால் பிஹார் தேர்​தலில் ஜேஎம்​எம் கட்​சிக்கு 2 தொகு​தி​கள் கூட ஒதுக்​கப்​பட​வில்​லை.

இதனால், 6 தொகு​தி​களில் அக்​கட்சி தனித்து போட்​டி​யிடு​வ​தாக அறி​வித்​தது. இதற்​கும் மெகா கூட்​ட​ணி​யில் எந்த தாக்​க​மும் இல்லை என்​ப​தால் பிஹார் தேர்​தலில் இருந்து விலகி விட்​டது.

இதன் காரண​மாக, நவம்​பர் 14-ல் வெளி​யாகும் பிஹார் தேர்​தல் முடிவுக்கு பிறகு ஜார்க்​கண்ட் ஆட்​சி​யில் மாற்​றம் ஏற்​படும் சூழல் உரு​வாகிறது. இண்​டியா கூட்​ட​ணி​யில் இருந்து ஜேஎம்​எம் வில​கும் வாய்ப்​பு​களும் ஏற்​பட்​டுள்​ளன.

கூட்டணி மறுபரிசீலனை: இதுகுறித்து ஜார்க்​கண்ட் அமைச்​சரும் ஜேஎம்​எம் மூத்த தலை​வரு​மான சுதிப்ய குமார் கூறுகை​யில், ‘‘ஜார்க்​கண்ட் அமைச்சர​வை​யில் ஆர்​ஜேடி, காங்​கிரஸுக்கு நாங்​கள் இடமளித்​துள்​ளோம். பிஹார் தேர்​தலில் இருந்து நாங்​கள் விலக இந்த கட்​சிகளே காரணம். இதற்கு சரி​யான பதிலடி​யாக ஜார்க்​கண்​டில் ஆர்​ஜேடி, காங்​கிரஸ் உடனான கூட்​ட​ணியை மறு​பரிசீலனை செய்​வோம்’’ என்​றார்.

இந்​நிலை​யில் ஜார்க்​கண்​டில் ஆர்​ஜேடி மற்​றும் காங்​கிரஸ் அமைச்​சர்​கள் விலக்​கப்​பட்​டால் பாஜக​வுடன் ஜேஎம்​எம் மீண்​டும் கைகோக்​கும் வாய்ப்​பு​கள் உரு​வாகி வரு​தாக கருதப்​படு​கிறது. ஜார்க்​கண்​டில் ஜேஎம்​எம் கட்​சிக்கு 3 எம்​.பி.க்​கள்​ இருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x