Published : 10 Nov 2025 08:18 AM
Last Updated : 10 Nov 2025 08:18 AM

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ரூ.67 கோடி சொத்து முடக்கம்

கோப்புப்படம்

புதுடெல்லி: பாப்​புலர் பிரன்ட் ஆப் இந்​தியா (பிஎப்ஐ) தீவிர​வாத செயல்​களை ஊக்​கு​விப்​ப​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக வழக்கு பதிவு செய்த தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ), பிஎப்ஐ அமைப்​புக்கு சொந்​த​மான இடங்​களில் சோதனை நடத்​தி​யது.

மேலும், அமலாக்​கத் துறை​யும் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிஎப்ஐ அமைப்​புக்கு மத்​திய அரசு தடை விதித்​தது. இந்த வழக்​கில் இது​வரை பிஎப்ஐ அமைப்​பைச் சேர்ந்த முக்​கிய உறுப்​பினர்​கள் 28 பேரை அமலாக்​கத் துறை கைது செய்​துள்​ளது. அத்​துடன் ரூ.62 கோடி மதிப்​பிலான சொத்​துகளை அமலாக்​கத் துறை ஏற்​கெனவே முடக்கி இருந்​தது.

இந்​நிலை​யில், பிஎப்ஐ மற்​றும் அதன் அரசி​யல் கட்​சி​யுடன் (எஸ்​டிபிஐ) தொடர்​புடைய அறக்​கட்​டளை​களுக்கு சொந்​த​மான மேலும் ரூ.67 கோடி மதிப்​பிலான சொத்​துகளை முடக்கி உள்​ள​தாக அமலாக்​கத் துறை தெரி​வித்​துள்​ளது. இதில் பெரும்​பாலான சொத்​துகள் கேரளா​வில் உள்​ளன. இத்​துடன் இந்த வழக்​கில் முடக்​கப்​பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.129 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x