Published : 09 Nov 2025 10:05 AM
Last Updated : 09 Nov 2025 10:05 AM
பெங்களூரு: கர்நாடகாவில் எம்பி, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அமைச்சர்கள், முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்து விவரங்களை ஊழல் கண்காணிப்பகமான லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்ய வேண்டும் என சட்ட விதிகள் 22, 22(1) வலியுறுத்துகின்றன.
நடப்பாண்டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்கள் ஆன பிறகும் பெரும்பாலான பிரதிநிதிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து லோக் ஆயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக அமைச்சர்கள் கே.ஹெச். முனியப்பா, தினேஷ் குண்டுராவ், ஜமீர் அகமது கான், ரஹீம் கான், வெங்கடேஷ் ஆகியோர் சொத்து கணக்கை அளிக்கவில்லை.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜண்ணா, லட்சுமண் சவதி உள்ளிட்ட 44 பேரும், பாஜக எம்எல்ஏக்கள் சித்துபாட்டீல், தினகர் கேசவ் ஷெட்டி உள்ளிட்ட 10 பேரும், மஜத எம்எல்ஏக்கள் ரேவண்ணா, சுரேஷ் பாபு ஆகிய 9 பேரும், இதர கட்சிகளை சேர்ந்த 5 பேரும் என மொத்தமாக 68 எம்எல்ஏக்களும் தங்களின் சொத்து கணக்கை தாக்கல் செய்யவில்லை.
காங்கிரஸை சேர்ந்த 13 பேர், பாஜகவில் 10 பேர், மஜதவில் 5 பேர் என 28 எம்எல்சிக்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT