Published : 09 Nov 2025 09:21 AM
Last Updated : 09 Nov 2025 09:21 AM

ஊடுருவல்காரர்கள் இல்லாத பிஹார்: அமித் ஷா உறுதி

கடிஹார்: பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக 122 பேரவை தொகு​தி​களுக்கு வரும் 11-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி பிஹாரின் கடிஹாரில் என்​டிஏ சார்​பில் நேற்று நடை​பெற்ற பிரச்​சார கூட்​டத்​தில் அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது:

பிஹாரில் ஊடுரு​வல்​காரர்​களை பாது​காக்​கும் பேரணியை லாலு​வும் ராகுல் காந்​தி​யும் தொடங்​கி​யுள்​ளனர். சீமாஞ்​சலை ஊடுரு​வல்​காரர்​களின் கோட்​டை​யாக அவர்​கள் மாற்ற விரும்​பு​கின்​றனர்.

ஆனால் நாங்​கள் சீமாஞ்​சலில் இருந்து ஊடுரு​வல்​காரர்​களை அடுத்த 5 ஆண்​டு​களுக்​குள் வெளி​யேற்​று​வோம். ஊடுரு​வல்​காரர்​கள் இல்​லாத மாநில​மாக பிஹாரை மாற்​று​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x