Published : 09 Nov 2025 09:03 AM
Last Updated : 09 Nov 2025 09:03 AM

பிஹாரில் 65.08% வாக்குப்பதிவு: மாநில வரலாற்றில் முதல்முறை

பாட்னா: மொத்​தம் 243 இடங்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு இரு கட்ட தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டது. இதில் முதல்​கட்​ட​மாக 18 மாவட்​டங்​களில் உள்ள 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹார் தலைமை தேர்​தல் அதி​காரி வினோத் குஞ்​சால் நேற்று கூறிய​தாவது:

பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் 65.08% வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. கடந்த 2020 பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 57.29% வாக்​கு​கள் பதி​வாகின. அதை​விட தற்​போது 7.79% கூடு​தல் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. பிஹார் தேர்​தல் வரலாற்​றில் 65.08% வாக்​கு​கள் பதி​வானது இதுவே முதல்​முறை. இதற்குமுன் கடந்த 1998 சட்​டப் பேரவை தேர்​தலில் 64.6% பதி​வாகின. இவ்​வாறு அவர் கூறி​னார்.

பிஹாரில் எதிர்க்​கட்​சிகளின் கடும் விமர்​சனத்​துக்கு மத்​தி​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) உறு​தி​யுடன் மேற்​கொள்​ளப்​பட்​டது. இதனால் ஏற்​பட்ட ஊடக வெளிச்​ச​மும் பொது ஆர்​வத்தை உரு​வாக்​கியது. மக்​கள் அதிக எண்​ணிக்​கை​யில்​ வந்​து வாக்​களிக்​கத்​ தூண்​டியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x